|
50
55 |
வல்லா டாயத்து மண்ண ரசிழந்து
மெல்லியல் தன்னுடன் வெங்கா னடைந்தோன்
காதலிற் பிரிந்தோ னல்லன் காதலி
தீதொடு படூஉஞ் சிறுமைய ளல்லள்
அடவிக் கானகத் தாயிழை தன்னை
இடையிருள் யாமத் திட்டு நீக்கியது
வல்வினை யன்றோ மடந்தைதன் பிழையெனச்
சொல்லலும் உண்டேற் சொல்லா யோந
|
|
வல்
ஆடு ஆயத்து - புட்கரனோடு சூதாடும் தாயத்தான், மண் அரசு இழந்து - நிலத்தினையும் அரசாட்சியையும்
இழந்து, மெல் இயல் தன்னுடன் வெங்கான் அடைந்தோன் - மென்மைத் தன்மையுடைய தமயந்தியுடன்
வெவ்விய காட்டை அடைந்தோனாகிய நளன், காதலிற் பிரிந்தோன் அல்லன் - பொருள்மீது
கொண்ட அன்பு காரணமாக அவளைப் பிரிந்தோ னுமல்லன், காதலி தீதொடு படூஉம் சிறுமையள்
அல்லள் - அவள் குற்றத்தின்கண் படுகின்ற இழிவினை உறுவாளுமல்லள், அடவிக் கானகத்து
ஆயிழை தன்னை - அங்ஙனமாகவும் அவளை அடவியாகிய காட்டினிடத்து, இடையிருள் யாமத்து இட்டு
நீக்கியது - இருள் நிறைந்த நடு யாமத்தின்கண் உறக்கிடைப் போகட்டு நீங்கச் செய்தது,
வல்வினை அன்றோ - அவர் முன் செய்த தீவினை அன்றோ, மடந்தைதன் பிழை எனச் சொல்லலும்
உண்டேல் சொல்லாயோ நீ - அத் தமயந்தியின் பிழையே காரணமாம் என்று சொல்லுதற்கு
வேறு உண்டாயின் நீ அதனைச் சொல்வாய் ;
ஆயம்
- தாயம். மண்ணும் அரசும் என்க. அடைந்தோன் - வினைப்பெயர். காதலிற் பிரிந்தோ
னல்லன் என்பதற்குத் தன் விருப்பம் காரணமாகவும் அவள் விருப்பம் காரணமாகவும் பிரிந்தோ
னல்லன் என்றும், காதலினின்றும், நீங்கினோ னல்லன் என்றும் உரைத்தலுமாம். தீது -
பிறர் நெஞ்சு புகுதல்.
தேவருள்
மிக்கா னொருவனையும், மக்களுள் மிக்கா னொருவனையும் முறையே எடுத்துக் காட்டியவாறு காண்க.
|
|