4. ஊர்காண் காதை

அனையையும் அல்லை ஆயிழை தன்னொடு
பிரியா வாழ்க்கை பெற்றனை யன்றே



58
உரை
59

       அனையையும் அல்லை - நீ அவர்களைப் போன்றாயுமல்லை, ஆயிழை தன்னொடு பிரியா வாழ்க்கை பெற்றனை அன்றே - என்னையெனின் ? நீ நின் மனைவியினின்றும் பிரியாத வாழ்க்கையினைப் பெற்றாயன்றே ;

       உம்மை - சிறப்பு. தீவினை காரணமாகத் துயருழத்தலின் முற்கூறிய இருவரோடு நீ ஒப்பாய் எனினும், நீ அவரினும் ஒரு நன்மையை உடையை ; அஃதென்னை யெனின் ? மனைவியைப் பிரியாது வாழ்தலாம் என்று கூறினாரென்க.