4. ஊர்காண் காதை

60

வருந்தா தேகி மன்னவன் கூடல்
பொருந்துழி யறிந்து போதீங் கென்றலும



60
உரை
61

       வருந்தாது ஏகி மன்னவன் கூடல் - இம் மன்னவனது கூடற்கண்ணே அறியாத் தேயத்து ஆரிடை யுழந்ததனை நினைந்து வருந்தாது சென்று, பொருந்துழி அறிந்து போது ஈங்கு என்றலும் - விருந்தெதிர் கொள்வாரிடத்தை அறிந்துகொண்டு ஈங்குப் போதுவாயாக என்று சொல்லலும் ;

       முன்னர், 1"மன்னர் பின்னோர்க் கென்னிலை யுணர்த்தி யான் வருங் காறும்" எனவும், பின்னர். "2தங்குல வாணர்.......கடி மனைப் படுத்துவர்" எனவும் வருவனவற்றை உட்கொண்டது பொருந்துழி யறிந்தென்றது என்க. தீங்கு பொருந்துழி அறிந்து போ எனவும் பொருள் கொள்ளக் கிடந்தமை காண்க.

1 சிலப், 14 : 21.2. 2 சிலப், 15 : 126--8.