4. ஊர்காண் காதை




65

இளைசூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த
இலங்குநீர்ப் பரப்பின் வலம்புண ரகழியில்
பெருங்கை யானை இனநிரை பெயரும்
சுருங்கை வீதி மருங்கிற் போகிக



62
உரை
65

       இளை சூழ் மிளையொடு - கட்டுவேலி சூழ்ந்த காவற் காட்டொடு பொருந்தி, வளைவுடன் கிடந்த இலங்கு நீர்ப் பரப்பின் வலம் புணர் அகழியில் - வளைவு பட்டுக் கிடந்த விளங்குகின்ற நீர்ப் பரப்பினையுடைய வெற்றி பொருந்திய அகழிக்கண், பெருங்கை யானை இனநிரை பெயரும் - பெரிய கையினை யுடைய யானையின் நிரைத்த இனங்கள் போக்கு வரவு செய்தற்கு அமைந்த, சுருங்கை வீதி மருங்கிற் போகி - சுருங்கையை உடைய வீதியினிடத்தைக் கழிந்து போய் ;

       இளை - காவல் அரணுமாம். சுருங்கை - புகுந்து செல்லுதலை ஒருவரு மறியாதபடி நிலத்தின்கீழ் மறைத்துப் படுத்த வழி; இதனைக் கரந்துறை எனவும், கரந்துபடை எனவும் கூறுவர்.