|
|
கடிமதில் வாயில் காவலிற் சிறந்த
அடல்வாள் யவனர்க் கயிராது புக்காங
|
|
கடி
மதில் வாயில் காவலிற் சிறந்த - அச்சத்தை விளைக்கும் மதிலின் வாயிலைக் காத்தற்றொழிலாற்
சிறப்புப்பெற்ற, அடல் வாள் யவனர்க்கு அயிராது புக்கு - கொல்லுதலையுடைய வாளினை ஏந்திய
யவனர்க்கு ஐயமுண்டாகா வண்ணம் புகுந்து;
கடி - அச்சம்; மிகுதியுமாம். யவனர் - துலுக்கர் என்பர் அடியார்க்கு நல்லார். அயிராது
- புதியரென ஐயுறாதபடி.
ஆங்கு - அவ்விடத்து ; |
|