4. ஊர்காண் காதை

 

காயிரங் கண்ணோன் அருங்கலச் செப்பு
வாய்திறந் தன்ன மதிலக வரைப்பில்



68
உரை
69

       ஆயிரங் கண்ணோன் அருங்கலச்செப்பு - ஆயிரங் கண் களையுடைய இந்திரனது பெறுதற்கரிய அணிகலங்களைப் பெய்த பணிப்பேழையின், வாய்திறந்தன்ன மதிலக வரைப்பில் - வாயைத் திறந்து வைத்தாற்போன்ற மதிலினுள்ளிடத்த தாகிய அந் நகர் எல்லைக்கண்ணே ;

       கலச்செப்பு - அணிகலப்பெட்டி. அகநகர்ச் சிறப்புக் கூறுதலான், 'மதிலக வரைப்பு' என்றார்.