|
85 |
எற்படு பொழுதின் இளநிலா முன்றில்
தாழ்தரு கோலந் தகைபா ராட்ட
வீழ்பூஞ் சேக்கை மேலினி திருந்தாங்
|
|
ஏற்படு
பொழுதின் - ஏற்பாடாகிய பொழுதிலே, இள நிலா முன்றில் - இளநிலாவின் பயனை நுகர்தற்குரிய
முற்றத்தில், தாழ்தருகோலம் தகை பாராட்ட - தம்மனத்திற் றங்கிய கோலத்தைப் புனைந்து
கொழுநர் பாராட்ட, வீழ்பூஞ் சேக்கைமேல் இனிது இருந்தாங்கு - விரும்பப்படும் மலரமளி
மேல் இனிமையுடனிருந்து ;
எற்படுபொழுது
- ஞாயிறு மறையும் பொழுது. தாழ்தரு கோலம் தகை பாராட்ட என்பதற்கு முன்னர்ப் புனலினும்
பொழிலினும் ஆடி இளைத்த கோலத்தைத் தங்கொழுநர் பாராட்டித் தீர்க்க என்றுரைப்பாருமுளர்.
காதலஞ் செல்வர் பாராட்ட அவருடன் இருந்தென்க. கோலத்தகை யென்பது மெலிந்து நின்றது.
ஆங்கு, அசை.
இஃது
ஏற்பாடு கழிக்குமாறு கூறியது. |
|