|
115 |
கோதை மாதவி கொழுங்கொடி யெடுப்பக்
காவும் கானமும் கடிமல ரேந்தத்
தென்னவன் பொதியில் தென்றலொடு புகுந்து
மன்னவன் கூடல் மகிழ்துணை தழூஉம்
இன்னிள வேனில் யாண்டுளன் கொல்லென்று
|
|
கோதை
மாதவி கொழுங்கொடி எடுப்ப - மாலையை யுடைய குருக்கத்தி அழகிய கொடியை யெடுக்கவும், காவும்
கானமும் கடிமலர் ஏந்த - இளமரக்காவும் நந்தனவனமும் நறிய மலர்களை ஏந்தவும், தென்னவன்
பொதியில் தென்ற லொடு புகுந்து மன்னவன் கூடல் - பாண்டியனது பொதியின் மலைத் தென்றலோடு
அம் மன்னவனது கூடலின்கட் புகுந்து, மகிழ்துணை தழூஉம் - தாம் விரும்பும் துணைகளைத் தழுவுவிக்கும்,
இன் இளவேனில் யாண்டுளன்கொல் என்று - இனிய இள வேனிலென்னும் அரசன் எவ்விடத்துள்ளான்
என்று ;
கோதை மாதவி - மாலைபோலப் பூக்கும்
குருக்கத்தி. கொடி யெடுப்ப - கொடி வளரப்பெற ; துகிற்கொடி யேந்திவர என்னும் பொருளும்
தோன்ற நின்றது. கூடலிற் புகுந்தென மாறுக, தழூஉம் - தழுவுவிக்கும் ; பிறவினை. |
|