4. ஊர்காண் காதை

உருவக் கொடியோ ருடைப்பெருங் கொழுநரொடு
பருவ மெண்ணும் படர்தீர் காலைக்



118
உரை
119

       உருவக் கொடியோர் - பூங்கொடி போலும் உருவினையுடைய மகளிர், உடைப்பெருங் கொழுநரொடு - தம்மை யுடைய பெரிய கொழுநரோடிருந்து, பருவம் எண்ணும் - அப் பருவங்களின் வரவை யெண்ணுகின்ற, படர் தீர் காலை - வருத்தம் நீங்கிய காலத்தே ;

       உருவக் கொடியோர் - உருவிலே யெழுதிய கொடியினையுடையோர் என்றுமாம் ; இவர் முற்கூறிய கடைகழி மகளிர். பருவம் எண்ணும் - முன்பு தமக் கின்பம் விளைத்த கார் முதலிய பருவங்கள் மீட்டும் வருதலை யெண்ணும். கடைகழி மகளிர் காதலஞ் செல்வரொடு சேக்கைமேலிருந்து பருவ மெண்ணும் முதுவேனிற் காலத்தென்க. வேனில் நீங்கிக் கார் தொடங்கும்பொழுது அணித்தாதலின் 'படர்தீர் காலை' என்றார்.