4. ஊர்காண் காதை

செம்பொன் வள்ளத்துச் சிலதிய ரேந்திய
அந்தீந் தேறல் மாந்தினர் மயங்கிப்



132
உரை
133

        செம்பொன் வள்ளத்துச் சிலதியர் ஏந்திய - ஏவற் பெண்டிர் பொன் வள்ளத்தில் ஏந்திய, அம் தீந்தேறல் மாந் தினர் மயங்கி - அழகிய இனிய கள்ளின் தெளிவைப் பருகின ராய்ப் பின்னும் மயங்கி ;

        
புணர்ச்சியானுண்டாய சோர்வினைப் போக்கிக் களிப்பு விளைத் தற்குத் தேறன் மாந்தின ரென்க.