|
150 |
வேத்தியல் பொதுவியல் எனவிரு திறத்து
மாத்திரை யறிந்து மயங்கா மரபின்
ஆடலும் வரியும் பாணியுந் தூக்கும்
கூடிய குயிலுவக் கருவியும் உணர்ந்து
|
|
வேத்தியல்
பொதுவியல் என இரு திறத்து மாத் திரை அறிந்து - வேத்தியலும் பொதுவியலுமாகிய இருவகைக்
கூத்தின் இயல்பினை யறிந்து, மயங்கா மரபின் ஆடலும்-அவை மயங்காத முறைமையானே ஆடும்
ஆடலும், வரியும்-பாடலும், பாணியும் - தாளங்களும், தூக்கும் - இத் தாளங்களின் வழி வரும்
எழுவகைத் தூக்குக்களும், கூடிய குயிலுவக் கருவியும் உணர்ந்து - இவற்றுடன் கூடியிசைக்கும் குயிலுவக்
கருவிகளும் உணர்ந்து ;
வேத்தியல் - அரசர்க்காடுவது
; பொதுவியல் - ஏனோர்க்காடுவது : இவை வசைக்கூத்தின் வகையென்ப. ஆடல் முதலியவற்றினியல்பினை
அரங்கேற்று காதையில் "ஆடலும் பாடலும் பாணியுந் தூக்கும், கூடிய நெறியின கொளுத்துங் காலை"
என வருவதன் உரை முதலியவற்றானறிக. குயிலுவக் கருவி - தோற்கருவி துளைக் கருவி நரப்புக்
கருவி யென்பன ; மத்தளம் தண்ணுமை இடக்கை சல்லிகை யென்னும் உத்தமத் தோற்கருவி நான்கு
மென்பாருமுளர். |
|