|
|
நால்வகை மரபின் அவினயக் களத்தினும்
ஏழ்வகை நிலத்தினும் எய்திய விரிக்கும்
மலைப்பருஞ் சிறப்பின் தலைக்கோ லரிவையும்
|
|
நால்வகை
மரபின் அவினயக் களத்தினும்-நால்வகை முறைமையினையுடைய அவினய நிலத்தினும், எழுவகை நிலத்தினும்
- குரல் முதலாய ஏழ் நிலத்தினும், எய்திய விரிக்கும் பொருந்திய ஆடல் பாடல்களைப்
பரப்பும், மலைப்பருஞ் சிறப்பின் தலைக்கோல் அரிவையும் - மாறுபடுத்தற்கரிய சிறப்பினையுடைய
தலைக்கோற் பட்ட மெய்திய அரிவையும் ;
அவினய நிலம் நான்காவன ; நிற்றல்
இயங்கல் இருத்தல் கிடத்தல் என்பன. தலைக்கோல் இயல்பினை 1
அரங்கேற்று காதையானறிக. |
1
சிலப் 3 : 114-20.
|
|