4. ஊர்காண் காதை

155

வாரம் பாடுந் தோரிய மடந்தையும்



155
உரை
155

        வாரம் பாடும் தோரிய மடந்தையும் - வாரப்பாட்டினைப் பாடும் தோரிய மடந்தையும் ;

        தோரிய மடந்தை - ஆடி முதிர்ந்த பின்பு பாடன் மகளாய் ஆடன் மகளிர் காலுக்கு ஒற்றறுத்துப் பாடுங்கால் இடத்தூண் சேர்ந்தியலுமவள்; 1"இந்நெறி வகையா லிடத்தூண் சேர்ந்த. தொன்னெறி யியற்கைத் தோரிய மகளிரும்" என்பதன் உரை காண்க.

1 சிலப் 3 : 133-4.