4. ஊர்காண் காதை




160

நால்வேறு வகையின் நயத்தகு மரபின்
எட்டுக் கடைநிறுத்த ஆயிரத் தெண்கழஞ்சு
முட்டா வைகல் முறைமையின் வழாஅத்
தாக்கணங் கனையார் நோக்குவலைப் பட்டாங்கு



157
உரை
160

        நால்வேறு வகையின் நயத்தகு மரபின் - நால்வகை யோடுங் கூடி யாவரும் விரும்பத்தக்க முறைமையினால், எட்டுக் கடை நிறுத்த ஆயிரத்து எண் கழஞ்சு - ஆயிரத்தெட்டு என்னும் எண்ணினையுடைய கழஞ்சினை, முட்டா வைகல் முறைமையின் வழா - நாடோறும் முட்டாது பெறும் முறைமையினின்றும் வழுவாத, தாக்கணங்கு அனையார் நோக்கு வலைப்பட்டு ஆங்கு - தீண்டி வருத்தும் அணங்கு போல்வாருடைய கண்ணாகிய வலையிலகப்பட்டு;

        எட்டினைக் கடையில் நிறுத்த ஆயிரம் - ஆயிரத்தெட்டு ; ஆயிரத்து எண் கழஞ்சு ; ஆயிரமாகிய எண்ணினையுடைய கழஞ்சு; ஆயிரக் கழஞ்சு என்பதூஉம் பாடம் ; ஆயிரத்தெட்டுக் கழஞ்சு பொன் பெறுதலை, 1"விதிமுறைக் கொள்கையி னாயிரத் தெண்கழஞ் சொருமுறையாகப் பெற்றனள்" என்பதனானும் அறிக. ஆங்கு, அசை; பட்ட அப்பொழுதே யென்றுமாம்.

1 சிலப், 3 : 162-3.