4. ஊர்காண் காதை


185

ஏகையும் மாலையும் இருளொடு துறந்த
பாசார் மேனிப் பசுங்கதிர் ஒளியவும



184
உரை
185

        ஏகையும் மாலையும் இருளொடு துறந்த - கீற்றும் தாருமாகிய குற்றங்களை இருளென்னும் குற்றத்தோடு நீக்கின, பாசார் மேனி - பசுமை நிறைந்த மெய்யையுடைய, பசுங் கதிர் ஒளியவும் - இளங்கதிரொளி பரந்த மரகதச் சாதியும் :

        ஏகை - இரேகை ; கீற்று. இருள் - கருகல். மரகதக் குற்றம் எட்டனுள் இவை மூன்றும் மிக்க குற்றமென்க. குற்றம் எட்டினையும், "கருகுதல் வெள்ளை கன்மணல் கீற்றுப், பொரிவு தராச மிறுகு தன் மரகதத், தெண்ணிய குற்ற மிவையென மொழிப" என்பதனானறிக. இனி, மரகதத்தின் குணமும் எட்டென்ப; அவற்றை, "நெய்த்தல்கிளி மயிற்கழுத் தொத்தல்பைம் பயிரிற், பசுத்தல் பொன்மை தன்னுடன் பசுத்தல், பத்தி பாய்தல் பொன்வண் டின் வயி, றொத்துத் தெளிதலொ டெட்டுங் குணமே" என்பதனானறிக.