4. ஊர்காண் காதை

பூச வுருவின் பொலந்தெளித் தனையவும்



188
உரை
188

        பூச உருவின் பொலம் தெளித்தனையவும் - பூசமீனின் உருவினையுடைய பொன்னைக் களங்கமறத் தெளிவித்தாலொத்த புருடராக வருக்கமும் ;

        பூசையுருவிற் பொலந்தேய்த்தனையவும் என்று பாடங்கொண்டு, பூனைக்கண் போன்று பொன்னைத் தேய்த்தாற் போன்றவை புருடராகம் என்பர் அரும்பத வுரையாசியர்.