|
190 |
இருள்தெளித் தனையவும் இருவே றுருவவும்
|
|
இருள்
தெளித்தனையவும் - இருளைத் தெளியவைத்தா லொத்த நீலமணி வருக்கமும் ;
"நீலத் தியல்பு நிறுக்குங் காலை, நால்வகை
வருணமும் நண்ணுமா கரமும், குணம்பதி னொன்றும் குறையிரு நான்கும், அணிவோர் செயலு மறிந்திசி
னோரே" என்பதனால், நீலத்திற்குச் சாதி நான்கும், குணம் பதினொன்றும், குற்றம் எட்டுமெனக்
கொள்க.
இருவேறு உருவவும் - மஞ்சளும் சிவப்பும்
கலந்தா லொத்த கோமேதக வருக்கமும் ;
இருவேறுரு வினையுடையன வயிடூரியம் என்பர்
அரும்பதவுரை யாசிரியர். |
|