|
|
கருப்பத் துளையவும் கல்லிடை முடங்கலும்
திருக்கு நீங்கிய செங்கொடி வல்லியும்
|
|
கருப்பத்
துளையவும் - நடுவே துளைபட்டனவும், கல்லிடை முடங்கலும் - கல்லிடுக்கிற் புக்கு வளைவுற்றனவும்,
திருக்கும் நீங்கிய - திருகுதலுற்றனவும் என்னும் இக் குற்றங்கள் நீங்கிய, செங்கொடி
வல்லியும் -சிவந்த கொடிப்பவள வருக்கமும் ;
கல்லுடை முடங்கல் எனப் பாடங்கொண்டு,
கல்லை உள்ளே யுடைய வளைவு என்பர் அரும்பத வுரையாசிரியர். பிறவும் குற்ற முளவாயினும்
இவை மிக்க குற்ற மென்க. இனி, குணம் மிக்குக் குற்றங்கள் நீங்கியன சிந்துரமும் ஈச்சங்காயும்
முசுமுசுக்கைக்கனியும் தூதுவழுதுணம் பழமும் போன்ற நிறமும் உருட்சியும் உடையன வென்பர்.
இனி, முற்கூறியவற்றுள் மாணிக்கத்தின்
இயல்பனைத்தும், 1"கதிர்நிறை" என்னும்
கல்லாடச் செய்யுளில். "குடுமிச் சேகரச் சமனொளி சூழ்ந்த, நிறைதரு நான்கி னிகழ்ந்தன
குறியும், குருவிந் தஞ்சௌ கந்திகோ வாங்கு, சாதுரங் கம்மெனுஞ் சாதிக ணான்கும், தேக்கி
னெருப்பிற் சேர்க்கினங் கையில், தூக்கினற் றகட்டிற் சுடர் வாய் வெயிலில், குச்சையின்
மத்தகக் குறியினோ ரத்தில், நெய்த்துப் பார்வையி னேர்ந்துசிவந் தாங்கு, ஒத்த நற்குண
முடையபன் னிரண்டும், கருகிநொய் தாதல் காற்று வெகுளி, திருகன் முரணே செம்ம ணிறுகல்,
மத்தகக் குழிவு காச மிலைச்சுமி, வெச்சம் பொரிவு புகைதல் புடாயம், சந்தைநெய்ப் பிலியெனத்
தகுபதி னாறு, முந்திய நூலின் மொழிந்தன குற்றமும், சாதகப் புட்கண் டாமரை கழுநீர், கோப
மின்மினி கொடுங்கதிர் விளக்கு, வன்னி மாதுளம் பூவிதை யென்னப், பன்னுசா துரங்க வொளிக்குணம்
பத்தும், செம்பஞ் சரத்தந் திலக முலோத்திரம், முயலின் சோரி சிந்துரங் குன்றி, கவிரல
ரென்னக் கவர்நிற மெட்டும், குருவிந் தத்திற் குறித்தன நிறமும், அசோகப் பல்லவ மலரிசெம்
பஞ்சு, கோகிலக் கண்ணீ ளிலவர் செம் பெனத், தருசௌ கந்தி தன்னிற மாறும், செங்கல்
குராமலர் மஞ்சள் கோவை, குங்கும மஞ்சிற் கோவாங்கு நிறமும், திட்டை யேறு சிவந்த விதாயம்,
ஒக்கல் புற்றாங் குருதி தொழுதினை, மணிகோ கனகங்கற்பம் பாடி, மாங்கிச கந்தி வளர்காஞ்
சுண்டையென், றாங்கொரு பதின்மூன் றடைந்த குற்றமும், இவையெனக் கூறிய நிறையருட்கடவுள்"
எனக் கூறப்பட்டுள்ளமை காண்க. இனி, வலன் என்னும் அவுணன் வேள்விப் பசுவாக இந்திரன்
அதனைச் செகுத்து வேள்வி செய்த பொழுது அதன் குருதி முதலியவற்றினின்று மாணிக்கம்
முதலிய நவமணிகள் பிறந்தனவென்று புராணங் கூறும்;
2"அத்தகை
யாவின் சோரி மாணிக்க மாம்பல் முத்தம்
பித்தைவை டூய மென்பு வச்சிரம் பித்தம் பச்சை
நெய்த்தவெண் ணிணங்கோ மேதந் தசைதுகிர் நெடுங்க ணீலம்
எய்த்தவை புருட ராக மிவைநவ மணியின் றோற்றம்"
என்பது காண்க. மற்றும் நவமணிகளின்
இயல்பனைத்தும் திரு வாலவா யுடையார் திருவிளையாடற் புராணத்து மாணிக்கம் விற்ற திருவிளையாடலிலும்,
பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்து
|
1
கல்லாடம், 99. 2
பரஞ். திருவிளை. மாணிக்கம். 35.
|
|