4. ஊர்காண் காதை


200

வகைதெரி மாக்கள் தொகைபெற் றோங்கிப்
பகைதெறல் அறியாப் பயங்கெழு வீதியும்



199
உரை
200

       வகை தெரி மாக்கள் தொகை பெற்று ஓங்கி - இவ் வொன்பது வகைப்பட்ட மணிகளின் பிறப்பு முதல் சிறப்பீறாய இயல்பனைத்தும் தெரியவல்ல வணிகர் தொகுதலால் உயர்ச்சியுற்று, பகை தெறல் அறியாப் பயங்கெழு வீதியும் - பகைவர் வருத்துதலை யறியாத பயன் மிக்க இரத்தினக் கடைத் தெருவும் ;