|
|
சாத ரூபம் கிளிச்சிறை ஆடகம்
சாம்பூ நதமென ஓங்கிய கொள்கையின்
பொலந்தெரி மாக்கள் கலங்கஞ ரொழித்தாங்கு
இலங்கொடி யெடுக்கும் நலங்கிளர் வீதியும
|
|
சாதரூபம்
கிளிச்சிறை ஆடகம சாம்பூநதம் என ஓங்கிய கொள்கையின் பொலம் தெரிமாக்கள் -சாதரூபமும்
கிளிச்சிறையும் ஆடகமும் சாம்பூநதமும் என்னும் நான்கு சாதியாக ஓங்கிய இயல்பினையுடைய
பொன்னின் வேற்றுமையைப் பகுத்தறியும் பொன் வாணிகர், கலங்கு, அஞர் ஒழித்து - கொள்வோர்
எவ்விடத்து எப்பொன் உளதென்று ஐயுறுந் துன்பத்தை ஒழிப்ப, ஆங்கு - அவ்விடங்களில்,
இலங்கு கொடி எடுக்கும் நலம் கிளர் வீதியும் - இவ்விடத்து இப் பொன் உளதென விளக்கக்
கொடி யெடுக்கும் நன்மை மிக்க பொற்கடைத் தெருவும் ;
ஒழித்து-
ஒழிப்பவெனத் திரிக்க. நால்வகைப் பொன்னுள் இறுதிக் கண்ணது 1"பொன்னுக்குச்
சாம்புனதம்" என உயர்த்துக் கூறப்படும். |
1
திருவள்ளுவமாலை. 36.
|
|