|
205 |
நூலினும் மயிரினும் நுழைநூற் பட்டினும்
பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து
நறுமடி செறிந்த அறுவை வீதியும்
|
|
நூலினும்
மயிரினும் நுழைநூற் பட்டினும் பால் வகை தெரியா - நுண்ணிய பருத்தி நூலானும் எலிமயிரானும்
பட்டு நூலானும் தத்தம் பகுதி தோன்ற நெய்யப்பட்டு, பன்னூறு அடுக்கத்து நறுமடி செறிந்த
அறுவை வீதியும் - ஒவ்வொன்று நூறாக அடுக்கப்பட்ட பல நூறு அடுக்குகளை யுடைய நறிய புடவைகள்
நெருங்கியுள்ள புடவைக் கடைத் தெருவும் ;
நூற்பட்டு - பட்டுநூல். மேல், 1
''பட்டினு மயிரினும், பருத்தி நூலினும், கட்டு நுண்வினைக் காருக ரிருக்கையும்'' என்புழி
உரைத்தமை காண்க. மணமூட்டுதலின், நறுமடி யென்றார். |
1
சிலப். 5 : 16-7.
|
|