|
|
மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்
|
|
மறத்துறை
விளங்கிய மன்னவன் கோயிலும் - வலிமை அமைந்த போர்த்துறைக்கண்ணே சேறலான் விளக்கமுற்ற
அரசனது கோயிலும் ஆகிய இவ்விடங்களில் ;
இனி, மறத்துறை விளங்குதற்குக் காரணமாகிய
மன்னவன் எனலும் பொருந்தும். மறத்துறையாவன வெட்சி முதலிய திணைகளும் அவற்றின் துறைகளுமாம்.
ஒரு பொருட்குக் கோயில், நியமம்,
நகரம், கோட்டம், பள்ளி எனப் பல பெயர் வந்தது ஓர் அணியாகும். இதனைப் பரியாயம்
என்பர். |
|