4. ஊர்காண் காதை

வால்வெண் சங்கொடு வகைபெற் றோங்கிய
காலை முரசங் கனைகுரல் இயம்பக்



13
உரை
14

       வால் வெண் சங்கோடு - தூய வெள்ளிய சங்கினோடும், வகைபெற்று ஓங்கிய காலை முரசம் கனை குரல் இயம்ப-மூன்று வகைப்பட்டு உயர்ந்த செறிந்த குரலினையுடைய காலை முரசம் ஒலிப்ப ;

       
வால் - தூய்மை. முரசவகையாவன : கொடை முரசு, வெற்றி முரசு, நியாய முரசு என்பனவாம்.