|
15 |
கோவலன் சென்று கொள்கையி னிருந்த
காவுந்தி ஐயையைக் கைதொழு தேத்தி
|
|
கோவலன்
சென்று கொள்கையின் இருந்த காவுந்தி ஐயையைக் கை தொழுது ஏத்தி - கோவலன் சென்று தவ
வொழுக்கத்தில் இருந்த கவுந்தியடிகளைக் கையால் தொழுது நாவாற் போற்றி ;
கொள்கை
- தவம் ; ஆவது தியானம். சென்று என்பதனாற் கவுந்தியடிகள் வேறிடத்திருந்தார் என்பதும்
கொள்கையின் இருந்த என்பதனால் அவர் தவநிலையில் இருந்தார் என்பதும் பெறப்படும்.
இனி, கொள்கையின் இருந்த என்பதற்கு இவர்களடையும் துன்பம் அடையாதிருந்த எனலும் பொருந்தும். |
|