5. அடைக்கலக் காதை


10
தீதுதீர் மதுரையும் தென்னவன் கொற்றமும்
மாதவத் தாட்டிக்குக் கோவலன் கூறுழித்


9
உரை
10

       தீது தீர் மதுரையும் தென்னவன் கொற்றமும் - குற்றம் நீங்கிய மதுரையின் சிறப்பினையும் பாண்டியனது கொற்றத்தையும், மாதவத்தாட்டிக்குக் கோவலன் கூறுழி - கவுந்தியடிகளுக்குக் கோவலன் கூறிய காலை ;

தீது - பசி, பிணி, பகை; இம் மூன்றும் அருள்வாய்த்த கோலின் செம்மையானும் வேலின் கொற்றத்தானும் இலவாயின என்க.