|
|
இம்மைச் செய்தன யானறி
நல்வினை
உம்மைப் பயன்கொல் ஒருதனி யுழந்தித்
திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது
விருத்தகோ பால நீயென வினவக் |
|
("இம்மைச்
செய்தன .... வினவ") விருத்த கோபால - அறிவால் முதிர்ந்த கோபாலனே, நீ இம்மைச்
செய்தன யான் அறி நல்வினை - யான் அறிய இப் பிறப்பின்கண் நீ செய்தன யாவும் நல்வினையே
யாகவும், உம்மைப் பயன்கொல் ஒரு தனி உழந்து இத் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது
- ஒப்பற்ற தனிமையான் வருந்தி இத் திருவினை ஒத்த மாணிக்கத் தளிருடன் இவண் புகுந்தது
முற்பிறப்பிற் செய்த தீவினையின் பயனேயோ, என வினவ - என்று மாடலன் கேட்க ;
ஒருதனி உழத்தல் - உசாவின்றி வருந்துதல்.
மாமணி - முழு மாணிக்கம். கண்ணகியின் இளமை கருதிக் கொழுந்து என்றார். விருத்தன் -
ஞான விருத்தன் எனல் மரபு. கோபால - கோவல. கொல் - ஐயம்.
கோபால நீ இம்மைச் செய்தன நல்வினை உழந்து
போந்தது உம்மைப் பயன்கொல் என மாறுக. |
|