|
110
|
அறத்துறை மாக்கட்
கல்ல திந்தப்
புறச்சிறை யிருக்கை பொருந்தா தாகலின்
அரைசர் பின்னோர் அகநகர் மருங்கினின்
உரையிற் கொள்வரிங் கொழிகநின் இருப்புக்
காதலி தன்னொடு கதிர்செல் வதன்முன்
மாட மதுரை மாநகர் புகுகென
மாதவத் தாட்டியும் மாமறை முதல்வனும்
கோவலன் றனக்குக் கூறுங் காலை |
|
அறத்துறை
மாக்கட்கு அல்லது - துறவறத்துறை யின்கண் நிற்கு முனிவர்களுக்கல்லது, இந்தப் புறச்சிறை
இருக்கை பொருந்தாது ஆகலின் - இவ் வெயிற்புறத்துப் பள்ளி யில் இருக்கும் இருக்கை ஒவ்வாது
ஆகலானும், அரைசர் பின் னோர் அகநகர் மருங்கின் நின் உரையிற் கொள்வர் - இவ் வக
நகரிடத்து உள்ள வணிகர் நினது புகழால் நின்னை அறிந்து எதிரேற்றுக்கொள்வர் ஆகலானும்,
இங்கு ஒழிக நின் இருப்பு - இவ்விடத்து நினது இருக்கையை ஒழிவாயாக, காதலி தன்னொடு கதிர் செல்வதன்முன் மாட மதுரை மா நகர் புகுகென - ஞாயிறு மேற்றிசை சென்று வீழ்வதன் முன்னர்
நின் மனைவி யோடு மடாங்களையுடைய மதுரை நகரத்தில் புகுகவென்று, மாதவத்தாட்டியும் மாமறை
முதல்வனும் கோவலன் தனக்குக் கூறுங்காலை - கவுந்தியடிகளும் மறையோனாகிய மாடலனும் கோவலனுக்குக்
கூறும்போது;
அறத்துறை - அறத்தின்கண் உறையும் எனலுமாம்.
புறச்சிறை இருக்கை - எயிற்புறத்துப் பள்ளி. அரைசர் பின்னோர் - நால்வகைக் குலத்து
அரசர்க்குப்பின் எண்ணப்படுபவராகிய வணிகர். அகநகர் மருங்கின் அரைசர் பின்னோர்
என்க. கோவலன் 1'மண்தேய்த்த புகழினான்'
ஆகலான் 'நின் உரையிற் கொள்வர்' என்றார். இனி, நின் உரையிற் கொள்வர் என்பதற்கு,
மாசாத்துவான் மகன் என்னும் புகழாற் கொள்வர் எனலுமாம். |
1.
சிலப். 1 ; 36.
|
|