|
|
தாயும் நீயே யாகித்
தாங்கிங்கு
என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன்
வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள் |
|
இங்கு
என்னொடு போந்த இளங்கொடி நங்கை தன் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்- இவ்விடத்து
என்னோடு கூடி வந்த இளங்கொடி போலும் இக் கண்ணகியினுடைய அழகிய சிறிய அடிகளை முன்னர்
நிலமகளும் கண்டறியாள்.
அடியை மண் மகள் அறிந்திலள் என்றது இவள்
அகம் விட்டுப் புறம்போகாமையான் என்க, இனி, இவளுடைய அடியின் மென்மையை உணர்ந்து அதற்கேற்ப
மண்மகள் தானும் மென்மையை அடைந்தாளிலள் எனவும், கால்கள் கொப்புளங்கொண்டு நிலத்திற்
பாவாமையின் அவற்றைக் கண்டிலள் எனவும் பொருள் கொள்ளக் கிடந்தமையும் காண்க. |
|