5. அடைக்கலக் காதை


150
தவத்தோர் அடைக்கலம் தான்சிறி தாயினும்
மிகப்பே ரின்பம் தருமது கேளாய்


149
உரை
150

      தவத்தோர் அடைக்கலம் தான் சிறிது ஆயினும் - தவமுடையோர் தரும் அடைக்கலப் பொருளைக் காக்கும் காவல் எளிதாயினும், மிகப் பேர் இன்பம் தரும் அது கேளாய் - மிகப் பெரிய இன்பத்தினை அளிக்கும் அதனை நீ கேட்பாயாக ;

அடைக்கலம் - அடைக்கலப் பொருளைப் பேணல். சிறிது - ஈண்டு எண்மைப் பொருட்டு.