|
155
|
காவிரிப் படப்பைப்
பட்டினந் தன்னுள்
பூவிரி பிண்டிப் பொதுநீங்கு திருநிழல்
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகொளிச் சிலாதல மேலிருந் தருளித்
தருமஞ் சாற்றுஞ் சாரணர் தம்முன் |
|
காவிரிப்
படப்பைப் பட்டினம் தன்னுள் - தோட்டக் கூறுகளையுடைய காவிரிப்பூம்பட்டினத்துள், பூ விரி
பிண்டிப் பொது நீங்கு திரு நிழல் - மலர் விரிந்த அசோகின் பொதுமை நீங்கிய அழகிய
நிழற்கண்ணே, உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட - சாவகர் பல்லோர் ஒன்ற சேர்ந்து
இட்ட, இலகு ஒளிச் சிலாதலம்மேல் இருந்தருளி - விளங்குகின்ற ஒளியினையுடைய சிலாவட்டத்தின்மேல்
எழுந்தருளி, தருமம் சாற்றும் சாரணர் தம்முன் - அறவுரை கூறுகின்ற சாரணர் முன்பாக ;
படப்பைக் காவிரிப்பட்டினம் என்க. 1
"காவிரிப்பட்டினம் கடல்கொளும்" என்றார் பிறரும். இனி, காவிரியைத் தோட்டக் கூற்றிற்கு
எல்லையாகவுடைய பட்டினம் என்றலும் பொருந்தும். நிழலின் பொதுமை நீங்கலாவது ஏனையவற்றின்
நிழல் சாயவும் தான் ஒன்றே சாயாது நிற்றலாம். 2
"உலக நோன்பிக ளொருங்குடனிட்ட, விலகொளிச் சிலாதலம்" என்றார் முன்னும். உலக நோன்பி
கள் - இல்லறத்திலிருந்து விரதங் காப்போர். |
1
மணி, 28; 135. 2
சிலப். 10; 24-5
. |
|