|
|
சாவக ரெல்லாம் சாரணர்த்
தொழுதீங்கு
யாதிவன் வரவென இறையோன் கூறும் |
|
சாவகர்
எல்லாம் சாரணர்த் தொழுது - உலக நோன்பிகள் யாவரும் சாரணரை வணங்கி, ஈங்கு யாது இவன்
வரவு என - இவ்விடத்து இத் தேவனுடைய வருகை யாதனைக் கருதியதாகும் என்று கேட்க, இறையோன்
கூறும் - சாரணர் தலைவன் கூறுவானாயினன், (கூறுபவன்) ;
முன்னர்ச் சாரணர் எனப் பன்மை கூறிப் பின்னர்
இறையோன் என ஒருமை கூறியது அவர்களுள் தலைவனே மக்களுக்கு அறிவுறுத்துவன அறிவுறுத்துவானாகலின்
என்க. முன்னரும், 1 "தருமஞ் சாற்றுஞ்
சாரணர் தோன்ற............சிந்தை விளக்கிற் றெரிந்தோ னாயினும்" எனக் கூறினமை
காண்க. |
1
சிலப், 10 ; 163-7.
|
|