|
200
|
கேட்டனை யாயினித்
தோட்டார் குழலியொடு
நீட்டித் திராது நீபோ கென்றே
கவுந்தி கூற உவந்தன ளேத்தி |
|
கேட்டனை
ஆயின் - தானத்தின் சிறப்பினை உணர்ந்து அதனை உடன்பட்டாயாயின் இத் தோட்டார் குழலி
யொடு - இந்தத் தொகுதி கொண்ட கூந்தலை யுடையாளொடு, நீட்டித்து இராது - தாழ்க்காது,
நீ போகென்றே கவுந்தி கூற - நீ செல்வாயாக என்று கவுந்தியடிகள் சொல்ல, உவந்தனள்
ஏத்தி - தான் பெற்ற அடைக்கலத்தின் பொருட்டு மகிழ்ந்து கவுந்தியடிகளைப் போற்றி
;
தோடார் எனற்பாலது தோட்டார் என விகாரமாயிற்று.
தோடு - மலர் எனினும் அமையும். |
|