|
15 |
மாதவ முனிவன் மலைவலங்
கொண்டு
குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து
தமர்முதற் பெயர்வோன் தாழ்பொழி லாங்கண்
வகுந்துசெல் வருத்தத்து வான்றுயர் நீங்கக்
கவுந்தி இடவயிற் புகுந்தோன் தன்னைக்
கோவலன் சென்று சேவடி வணங்க |
|
தாழ்
நீர் வேலித் தலைச்செங்கானத்து - தாழ்ந்த நீரை வேலியாகவுடைய தலைச்செங்காடு என்னும்
ஊரிடத்துள்ள, நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை-நான்கு வேதங்களையும் முற்ற உணர்ந்த
நன்மையை விரும்பிய கோட்பாட்டினையுடைய, மாமறை முதல்வன் மாடலன் என்போன் - மறையவர்
தலைவனாகிய மாடலன் எனப்படுவோன் ;
தாழ்தல் - ஆழமாதல்; தங்குதல் என்றுமாம். தாழ்நீர் - கடல்; கிடங்குமாம்.மாதவ முனிவன்
மலை வலங்கொண்டு-மிக்க தவத்தினையுடைய அகத்திய முனிவனுடைய பொதிய மலையை வலங்கொண்டு,
குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து - குமரியின் பெரிய துறைக்கண் முறைப்படி நீராடி,
தமர்முதற் பெயர்வோன் - தம் கிளைஞர் இருக்குமிடத்திற்கு மீண்டுவருவோன், தாழ் பொழில்
ஆங்கண் வகுந்து செல் வருத்தத்து வான் துயர் நீங்கக் கவுந்தி இடவயின் புகுந்தோன் தன்னை
- வழிச் சென்ற வருத்தத்தான் உண்டாய மிக்க துயரம் ஒழிய நிழல் படிந்த சோலையுள்ள
அவ்விடத்துக் கவுந்தியடிகளிருந்த பள்ளியிடத்துப் புக்கவனை, கோவலன் சென்று சேவடி வணங்க
- கோவலன் சென்று சேவடிக்கண் தொழ ;
குமரி - யாறு, கடலுமாம்; 1''தொடியோள்
பௌவம்'' என்றாராகலின். முதல் - இடம். வகுந்து - வழி. இடவயின் - இடத்தில். துயர்
நீங்கப் பொழிலாங்கண் இடவயிற் புகுந்தோன் என்க. புகுந்தான் ; புகுந்தவனை என அறுத்துரைக்க. |
1
சிலப். 8 : 1.
|
|