|
|
ஞாயிலும் சிறந்து நாட்கொடி
நுடங்கும்
வாயில் கழிந்துதன் மனைபுக் கனளால்
கோவலர் மடந்தை கொள்கையிற் புணர்ந்தென். |
|
நாள்
கொடி நுடங்கும் - நாள்தோறும் பகைவரை வென்று வென்று உயர்த்திய கொடிகள் அசையும், வாயில்
கழிந்து - மதில் வாயிலைக் கடந்து, தன் மனை புக்கனளால் கோவலர் மடந்தை கொள்கையிற்
புணர்ந்தென் - இடையர் குலத்தாளாகிய மாதரி அடைக்கலம் பெற்ற கொள்கையொடு பொருந்தித்
தன் மனைக்கண் புக்காள் ;
நாள் கொடி - நல்ல நாளில் எடுத்த
கொடியுமாம். ஆல்-அசை. சிறந்து நுடங்கும் வாயில் என்க.
மா நகர் கண்டு பொழிலிடம் புகுந்து
கோவலன் கூறுழி மாடலன் என்போன் புகுந்தோன்றன்னைக் கோவலன் வணங்க, அந்தணன் உரைப்போன்
கருணை மறவ, செல்லாச் செல்வ, இல்லோர் செம்மல், உம்மைப் பயன்கொல் போந்தது நீயென
வினவ, கோவலன் கனவு கண்டேன் கடிதீங்குறும் என, இங்கு ஒழிக நின் இருப்பு, மதுரை மா நகர்
புகுக என மாதவத்தாட்டியும் மாமறை முதல்வனும் கூறுங்காலை, மாதரி என்போள் ஐயையைக் கண்டு
அடி தொழலும், எண்ணினளாகி, அடைக்கலம் தந்தேன் மடந்தையைத் தாயும் நீயே ஆகித் தாங்கு,
அடைக்கலம் சிறிதாயினும் பேரின்பம் தரும், அது கேளாய், பட்டினந்தன்னுள் சாரணர் தம்முன்
குரங்கின் கையொருபாகத்து வானவன் வந்து நின்றோனை யாது இவன் வரவு என, இறையோன் தேவகுமரன்
தோன்றினன் என்றலும், அறந்தலைப்பட்டோர் முடிவுலகெய்தினர் ; கேட்டனையாயின் நீ போகென்று
கவுந்தி கூற, நங்கையொடு கோவலர் மடந்தை கொள்கையிற் புணர்ந்து மனைபுக்கனள் என முடிக்க.
இது
நிலைமண்டில ஆசிரியப்பா.
அடைக்கலக்
காதை முற்றிற்று. |
|