5. அடைக்கலக் காதை

20 நாவ லந்தணன் தானவின் றுரைப்போன


20
உரை
20

      நா வல் அந்தணன் தான் நவின்று உரைப்போன் - நாவில் வல்ல அம் மாடலன் அவனை வினவித் தான் உரைக்கின்றவன் ;

நாவல் என்பதனைப் பிரிக்காது, நாவலந் தீவு என்றும், வெற்றி என்றும் கூறுதலுமாம். 1''நாவ லந்தண ரருமறைப் பொருளே'' என்பது காண்க. நவின்று - வினவியென்னும் பொருட்டு ; நீர் இங்ஙனம் வந்த காரணம் யாதென வினவியென்க.

1 பரிபாடல். செய். 1, 2.