|
25
|
வேந்துறு சிறப்பின்
விழுச்சீ ரெய்திய
மாந்தளிர் மேனி மாதவி மடந்தை
பால்வாய்க் குழவி பயந்தன ளெடுத்து
வாலா மைந்நாள் நீங்கிய பின்னர்
மாமுது கணிகையர் மாதவி மகட்கு
நாம நல்லுரை நாட்டுது மென்று
தாமின் புறூஉந் தகைமொழி கேட்டாங |
|
வேந்து
உறு சிறப்பின் விழுச்சீர் எய்திய - அரசன் அளித்த மிக்க தலைவரிசையால் சிறந்த புகழினைப்
பெற்ற, மாந்தளிர் மேனி மாதவி மடந்தை - மாந்தளிர் போலும் மேனியையுடைய மாதவியாகிய
மடந்தை, பால் வாய்க் குழவி பயந்தனள் எடுத்து - நற்பகுதி வாய்த்தலையுடைய பெண் குழந்தையினைப்
பெற்றெடுத்து, வாலாமை நாள் நீங்கிய பின்னர் - தூய்மையின்மையாகிய நாட்கள் கழிந்த
பின்னர், மா முது கணிகையர் - ஆண்டில் முதிர்ந்த கணிகை மகளிர், மாதவி மகட்கு நாம
நல் உரை நாட்டுதும் என்று - மாதவியின் புதல்விக்கு நல்ல புகழ் அமைந்த பெயரை இடுவோம்
என்று, தாம் இன்பு உறூஉம் தகை மொழி கேட்டு ஆங்கு - தாங்கள் மகிழ்ச்சியுறுதற்குக் காரணமாகிய
தகுதி அமைந்த சொல்லினைக்கூறக் கேட்டு அப்பொழுது;
' வேந்துறு சிறப்பின் விழுச்சீர் எய்திய'
என்றது அரசனால் தலைக்கோல் பெற்று ஆயிரத்து எண்கழஞ்சு பொன் பெற்றதனை. பெரும்புலவோர்
ஒரு நிகழ்ச்சியினைக் கூறுங்கால், அந் நிகழ்ச்சியின் மேல் விளைவினையும் ஆண்டே புலப்படுத்தல்
இயல்பாகலான், 'பால் வாய்க்குழவி' என்றார் ; பால் - பகுதி ; நல்லூழ்; பால்வாய்
என்பது குழவிக்கு இயற்கையடை என்றலுமாம். வாலாமை - புனிறு தீராமை. முதுகணிகையர் - சித்திராபதி
முதலியோர். முன்னர்க் குழவி என்ற பொதுமை நீங்க மகட்கு என்றார். நல்லுரை நாமம் என்க.
கேட்டான் கோவலன். |
|