|
40
|
அணிமே கலையார் ஆயிரங்
கணிகையர்
மணிமே கலையென வாழ்த்திய ஞான்று
மங்கல மடந்தை மாதவி தன்னொடு
செம்பொன் மாரி செங்கையிற் பொழிய |
|
அணிமேகலையார்
ஆயிரங் கணிகையர் - அழகு செய்யும் மேகலையை அணிந்த ஆயிரங் கணிகையர் கூடி, மணிமேகலை
என வாழ்த்திய ஞான்று - மணிமேகலை எனப் பெயர் இட்டு அக் குழவியை வாழ்த்திய அற்றை
நாள், மங்கல மடந்தை மாதவி தன்னோடு - அழகினை யுடைய மடந்தையாகிய மாதவியோடு, செம்பொன்
மாரி செங்கையில் பொழிய - சிவந்த பொன்னாகிய மழையினைச் சிவந்த கையாலே நீ பொழிய;
ஆயிரம் - எண்ணின் மிகுதி குறிப்பது. வாழ்த்திய
- அரசனையும் நகரினையும் வாழ்த்திய என்றுமாம். |
|