6. கொலைக்களக் காதை


அரும்பெறற் பாவையை அடைக்கலம் பெற்ற
இரும்பே ருவகையின் இடைக்குல மடந்தை



1
உரை
2

          அரும் பெறற் பாவையை அடைக்கலம் பெற்ற - பெறுதற்கு அரிய பாவை போல்வாளாய கண்ணகியை அடைக்கல மாகப் பெற்ற, இரும் பேர் உவகையின் இடைக்குல மடந்தை - மிக்க பெரிய மகிழ்ச்சியினையுடைய இடைக்குலத்துத் தோன்றிய மாதரி ;

அரும் பெறல் - பெறலரும் என மாறுக. மடந்தை - ஈண்டுப் பருவங் குறியாது பெண்பாலை உணர்த்தி நின்றது. தான் அடைக்கலங்காக்கப் பெற்றமையால் இரும்பேருவகை எய்தினாள் என்க.