6. கொலைக்களக் காதை


55

உண்டினி திருந்த உயர்பே ராளற்கு
அம்மென் திரையலோ டடைக்கா யீத்த

மையீ ரோதியை வருகெனப் பொருந்திக்


54
உரை
56

         உண்டு இனிது இருந்த உயர் பேராளற்கு - இனிதே உணவுண்டு தங்கிய உயர்ந்த பெருமையுடையோனாகிய கோவலனுக்கு, அம் மென் திரையலோடு அடைக்காய் ஈத்த - அழகிய மெல்லிய வெற்றிலையோடு பாக்கினையும் தந்த, மையீர் ஓதியை வருகெனப் பொருந்தி - கரிய குளிர்ந்த கூந்தலையுடை யாளை வருகவென்று அருகணைத்து ;

        ஒருமுறை கழித்து உண்டினிதிருந்த பேராளன் என முடிக்க. திரையல் - வெற்றிலைச் சுருள். ஓதி - ஆகுபெயர்.