|
.
65.
70 |
வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு
குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப
பொச்சாப் புண்டு பொருளுரை யாளர
நச்சுக்கொன் றேற்கும் நன்னெறி யுண்டோ
இருமுது குரவ ரேவலும் பிழைத்தேன
சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன்
வழுவெனும் பாரேன் மாநகர் மருங்கீண்டு
எழுகென எழுந்தாய் என்செய் தனையென
|
|
வறுமொழியாளரொடு வம்பப் பரத்தரொடு - பயனிலசொல்வாரோடும் புதிய பரத்தமையை
யுடையாரோடுங் கூடி, குறுமொழிக் கோட்டி நெடு நகை புக்கு - சிறு சொற் சொல்லும் இழிந்தோர்
கூட்டத்தின்கண் மிக்க சிரிப்புக்கு உட்பட்டு, பொச்சாப்பு உண்டு - மறவியிற் பொருந்தி,
பொருள் உரையாளர் நச்சுக் கொன்றேற்கு - பொருள் பொதிந்த உரை யினையுடைய பெரியோர்
விரும்புகின்ற நல்லொழுக்கத்தினைக் கெடுத்த எனக்கு, நன்னெறி உண்டோ - இனித் தீக்
கதியன்றி நற்கதியுண்டாமோ, இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன் - தாய்தந்தையர்க்கு ஏவல்
செய்தலினும் வழுவினே ன் சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன் - சிறு பருவத்தில்
பெரிய அறிவினையுடையளாய நினக்கும் தீமை செய்தேன், வழு வெனும் பாரேன் - இங்ஙனம் நம்
நகர் விட்டு இங்கு வருதல் குற்றமுடைத்தாம் என்பதனைச் சிறிதும் நோக்கேனாய், மா நகர்
மருங்கு ஈண்டு எழுகென எழுந்தாய் - நமது பெரிய நகரத் திடத்தினின்றும் இவ்விடத்து எழுக
வென்று யான் கூற உடனே ஒருப்பட்டு எழுந்தனை, என் செய்தனை என - என்ன அரிய காரியஞ்
செய்தனையென்று கோவலன் இரங்கிக் கூற;
வறுமொழி - பொருளில் மொழி, வம்பப்
பரத்தர் - புதிய காம நுகர்ச்சி விரும்புங் காமுகர். கோட்டி - கூட்டம் பொச்சாப்பு
- மறதி. நச்சு - நச்சப்படும் பொருள். கொல்லல் - ஈண்டு மேற் கொள்ளாமை. ஏவல் பிழைத்தல்
- தாய் தந்தையர்க்குச் செய்வன தவிர்தல் ; இனி, மாதவியின் நட்பை அவர்கள் ஒழித்திடுக
என்னவும் ஒழியாமையுமாம். எனும் - சிறிதும். ஈண்டு என்றது மதுரையை. இத்துணையும் தனது ஒழுக்கத்தினை
வெறுத்துக் கூறி இவ் வரவிற்கு நீயும் உடன்பட்டனையே என இரங்கிக் கூறினான். |
|