மூலம்
6. கொலைக்களக் காதை
100
இமிலே றெதிர்ந்த திழுக்கென அறியான்
தன்குலம் அறியுந் தகுதியன் றாதலின்
100
உரை
101
இமில் ஏறு எதிர்ந்தது. இழுக்கு என அறியான் தன் குலம் அறியும் தகுதி அன்று ஆதலின் - முரிப்பினையுடைய ஆனேறு தன்னை எதிர்ந்து பாய வந்ததனைத் தீய நிமித்தமென்று அறிந்திலன்; அது தனது குலம் உணரும் தகுதியினை உடைத்தன்று ஆகலான்;
எதிர்தல் - எதிர்ப்படலுமாம். தகுதியன்று ஆகலின் அறியான் என்க. அறியான் - முற்றெச்சம்.