|
|
தாதெரு மன்றந் தானுடன் கழிந்து
மாதர் வீதி மறுகிடை நடந்து
பீடிகைத் தெருவிற் பெயர்வோன் ஆங்கண்
|
|
. தாது எரு
மன்றம் தான் உடன் கழிந்து - தாதாகிய எருவினையுடைய மன்றமெல்லாங் கழிந்து, மாதர்
வீதி மறுகிடை நடந்து - தளிப் பெண்டுகள் தெருவின் நடுவே நடந்து சென்று, பீடிகைத் தெருவிற்
பெயர்வோன் ஆங்கண் - கடைவீதியிற் செல்கின்றவன் அவ்விடத்தே ;
தாதெருமன்றம் - எருக்கள் துகளாகிக் கிடப்பதும், மரத்தடியுமாகிய
இடம். தளிப்பெண்கள் - கோயிற்பணி செய்யும் மகளிர். வீதி மறுகு - ஒருபொருட் பன்மொழி.
|
|