6. கொலைக்களக் காதை

105





110

கண்ணுள் வினைஞர் கைவினை முற்றிய
நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர
மெய்ப்பை புக்கு விலங்குநடைச் செலவின்
கைக்கோற் கொல்லனைக் கண்டன னாகித்
தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற

பொன்வினைக் கொல்லன் இவனெனப் பொருந்திக்
காவலன் றேவிக் காவதோர் காற்கணி
நீவிலை யிடுதற் காதி யோவென



105
உரை
112

    .  கண்ணுள் வினைஞர் - உருக்குத் தட்டாரும், கைவினை முற்றிய நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர - கைத்தொழிலில் தேர்ந்த நுட்ப வினைத்திறமுடைய பணித் தட்டாரும் நூறு பெயர் தன் பின்னே வர, மெய்ப்பை புக்கு - சட்டை அணிந்து, விலங்கு நடைச்செலவின் - விலகி நடக்கும் செலவினையுடைய, கைக்கோல் - கையின்கண் கொடிற்றினையுடைய, கொல்லனைக் கண்டனன் ஆகி - பொற்கொல்லனைக் கண்டு, தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற பொன்வினைக் கொல்லன் இவன் எனப் பொருந்தி - பாண்டியன் பெயரோடு வரிசை பெற்ற பொற்றொழிலில் தேர்ந்த கொல்லனாவான் இவன் எனக் கருதி அவனை அண்மி, காவலன் தேவிக்கு ஆவதோர் காற்கு அணி நீ விலையிடுதற்கு ஆதியோ என - அரசன் பெருந்தேவிக்கு அணியலாவதொரு காற்சிலம்பினை நீ விலை மதிப்பிடுதற்கு வல்லையோ என்று கேட்ப ;

     மெய்ப்பை - சட்டை. விலங்கு நடை - உயர்ந்தோரைக் காணின் விலகி நடத்தல். கைக்கோல் - கொடிறு. தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற கொல்லன் எனக் கண்டான், நூற்றுவர் பின்வரலான். காற்கு அணி - காலில் அணியும் சிலம்பு. ஆதியோ - ஆவாயோதன் சிலம்பின் அருவிலை கருதி ஆதியோ வென்றான். பின்வரச் செல்லுதலையுடைய கொல்லன் என்க.

      ஒழிகெனத் தழீஇக் கண்டு வெதும்பிக் கண்ணனாகி நீங்கிச் செல்வோன் அறியான் கழிந்து நடந்து பெயர்வோன் கண்டனனாகிப் பொருந்தி ஆதியோவென என்க.

        இனிப் பொற்கொல்லன் கூறுவான் :-