6. கொலைக்களக் காதை





115

இனிப பொற்கொல்லன் கூறுவான்:-
அடியேன் அறியே னாயினும் வேந்தர்
முடிமுதற் கலன்கள் சமைப்பேன் யானெனக்

கூற்றத் தூதன் கைதொழு தேத்தப்
போற்றருஞ் சிலம்பின் பொதிவா யவிழ்த்தனன்


113
உரை
116

அடியேன் அறியேன் ஆயினும் - அடியேன் மகளிர் காலணியின் விலைமதித்தற்கு அறியேன் எனினும், வேந்தர் முடி முதற் கலன்கள் சமைப்பேன் யான் என - அரசர்களுக்கு முடி முதலிய அணிகலன்களை நன்கு சமைப்பேன் யான் என்று சொல்லி, கூற்றத் தூதன் கை தொழுது ஏத்த - கூற்றுவனின் தூதனாக வந்த பொற்கொல்லன் கையான் வணங்கிப் புகழ, போற்றரும் சிலம்பின் பொதிவாய் அவிழ்த்தனன் - புகழ்தற்கரிய சிலம்பினைப் பொதிந்த பொதியின் கட்டினைக் கோவலன் அவிழ்த்தனனாக ; சமைத்தல் - நன்கு அமைத்தல். பொதிவாய் - கட்டுவாய்.