6. கொலைக்களக் காதை





165

இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கிவன்
கொலைப்படு மகனலன் என்று கூறும்
அருந்திறன் மாக்களை அகநகைத் துரைத்துக்

கருந்தொழிற் கொல்லன் காட்டின னுரைப்போன்


162
உரை
165

          இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கு இவன் - இவ்விடத்திருந்தோனாகிய இவன் மெய்ப்பொறியானும் இருக்கின்ற முறைமையானும், கொலைப்படு மகன் அலன் என்று கூறும் - கொலை செய்தற்குரிய கள்வன் அல்லன் என்று கூறுகின்ற, அருந்திறல் மாக்களை அக நகைத்து உரைத்து - அரிய திறலையுடைய வேற்காரரை எள்ளல் நகை நகைத்து இகழ்ந்து கூறி, கருந்தொழிற் கொல்லன் காட்டினன் உரைப்போன் - கொலைத் தொழிலை விரும்பிய கொல்லன் களவு நூலிலுள்ள ஏதுக்களைக் காட்டி உரைப்பவன் :

        இலக்கண முறைமை - இலக்கணமும் முறைமையும் ; உம்மைத் தொகை. அக நகை - இகழ்ச்சி நகை. இனி, அக நக என்று பாடங் கொண்டு வேற்காரர் உளம் பிரியமாம்படி எனவும் கூறுப்.