6. கொலைக்களக் காதை


10

கூடன் மகளிர் கோலங் கொள்ளும்
ஆடகப் பைம்பூ ணருவிலை யழிப்பச்

செய்யாக் கோலமொடு வந்தீர்க் கென்மகள்
ஐயை காணீ ரடித்தொழி லாட்டி
பொன்னிற் பொதிந்தேன் புனைபூங் கோதை
என்னுட னங்கையீங் கிருக்கெனத் தொழுது



9
உரை
14

          கூடல் மகளிர் கோலங் கொள்ளும் - கூடல் நகரிடத்து மகளிர் அழகின் பொருட்டுக் கொள்ளுகின்ற, ஆடகப் பைம் பூண் அருவிலை அழிப்ப - பொன்னாற் செய்த பசிய பூணின் அரிய உயர்ச்சியைக் கெடுத்தற்கு, செய்யாக் கோலமொடு வந்தீர்க்கு - இயற்கை யழகுடன் வந்த நுமக்கு, என் மகள் ஐயைகாணீர் அடித்தொழிலாட்டி - எனக்கு மகளாய ஐயை குற்றேவல் மகளாவாள், பொன்னிற் பொதிந்தேன் - பொன்னைப் போல் அரிதாகப் போற்றுவேன், புனை பூங் கோதை என்னுடன் நங்கை ஈங்கு இருக்கெனத் தொழுது - அழகிய பூங்கோதையினை யுடைய நங்காய் என்னுடன் இவ்விடத்திருப்பா யாகவென வணங்கி ; கூடல் மகளிர் என்றாள், தானறியுமூர் அதுவாகலான். பூண்விலையை அழித்தலாவது, இவளது இயற்கை அழகு கண்டார் பூணின் நலனை இகழ்தலாம். செய்யாக் கோலம் - புனையா அழகு ; ஆவது இயற்கை அழகு. இனி,

          கூடல் மகளிர் கொள்ளுகின்ற அரிய விலையை யுடைய ஆடகப் பைம்பூணாற் செய்த கோலம் அழித்தற்கு எனவுமுரைப்ப. நங்கை - விளி. நங்கை - மகன் மனைவியைக் குறிக்கும் முறைப் பெயரென்பர் அடியார்க்கு நல்லார்.