6. கொலைக்களக் காதை



மந்திர நாவிடை வழுத்துவ ராயின
இந்திர குமரரின் யாங்காண் குவமோ


172
உரை
173

       மந்திரம் நாவிடை வழுத்துவர் ஆயின் - கள்வர் மந்திரத்தினை நாவினிடத்து உச்சரிப்பாராயின், இந்திர குமரரின் யாம் காண்குவமோ - தேவ குமாரரைப் போல அவரையும் நாம் காணமாட்டோம்;

      இந்திரர் - தேவர் ; 1 "இந்திரர் அமுத மியைவ தாயினும்" என்றார் பிறரும். இந்திர குமரர் - தேவகுமாரர் ; தேவர். ஓகாரம் எதிர் மறை

1 புறம், 181.