|
175 |
தெய்வத் தோற்றம் தெளிகுவ ராயின்
கையகத் துறுபொருள் காட்டியும் பெயர்குவர்
|
|
தெய்வத் தோற்றம் தெளிகுவர் ஆயின் - அவர் தம் தெய்வத்தின் வடிவினை உள்ளத்தே தெளிந்து
நினைப்பாராயின், கையகத்து உறு பொருள் காட்டியும் பெயர்குவர் - தம் கையிலகப்பட்ட
மிக்க பொருளினை நமக்குக் காட்டியும் தப்புவார்;
தோற்றம் - வடிவு. |
|