6. கொலைக்களக் காதை


நிமித்தம் வாய்த்திடி னல்ல தியாவதும்
புகற்கிலர் அரும்பொருள் வந்துகைப் புகினும்


178
உரை
179

     நிமித்தம் வாய்த்திடின் அல்லது - நன்னிமித்தம் வாய்க்கப் பெற்றா லல்லது, யாவதும் புகற்கிலர் அரும்பொருள் வந்து கைப் புகுதினும் - பெறுதற்கரிய மிக்க பொருள் தானே வந்து கிடைப்பினும் எளியவிடத்தும் புகார் ;

      யாவதும் - எத்துணை எளியவிடத்தும் ; யாவதும் புகற்கிலர் - சிறிதும் விரும்பார் என்றுமாம்.