6. கொலைக்களக் காதை

180

தந்திர கரணம் எண்ணுவ ராயின்
இந்திரன் மார்பத் தாரமும் எய்துவர


180
உரை
181

     தந்திர கரணம் எண்ணுவர் ஆயின் - களவு நூலிற் சொல்லுகின்ற தொழில்களை எண்ணிச் செய்வாராயின், இந்திரன் மார்பத்து ஆரமும் எய்துவர் - இந்திரன் மார்பிலணிந்த ஆரத்தினையும் அடைகுவர் ;

     தந்திரம் - நூல், களவுநூல், கரணம் - தொழில். எண்ணுதல் - ஆய்ந்து செய்தல்.